நைஜீரியாவில் இருந்து கனடாவிற்கு திரும்பிய இருவருக்கு Omicron மாறுபாடு உறுதிசெய்யப்பட்டுள்ளது – கனடியர்களுக்கு அறிவுரை

masks-720x450
கனடாவில் முகக்கவசம் கட்டாயமாகிறது (ஆதாரம்: CP24)

வீரியம் மிக்க Omicron மாறுபாடு உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கனடாவின் ஹாமில்டன் மற்றும் பீல் பிராந்தியத்தில் omicron வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹால்டன் பகுதியில் பயணம் மேற்கொண்ட ஒரு நபரிடம் பிராந்தியத்தின் முதல் வழக்கு உறுதி செய்யப்பட்டதாக பீல் பொது சுகாதாரம் அறிவித்துள்ளது.

Omicron வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ,மற்றவருக்கு பரவும் அபாயம் குறைவாக இருப்பதாகவும் சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பீல் பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் லாரன்ஸ் லோ ” உலகம் முழுவதும் Omicron மாறுபாடு அச்சுறுத்தி வருவதால் மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் மற்றும் தொற்று ஏற்பட்டால் பரிசோதனை செய்து தனிமைப் படுத்தப்பட வேண்டும் ” என்று அறிவுறுத்தினார்.

தென்னாப்பிரிக்கா பயணத்தை தொடர்ந்து இரண்டு நபர்களுக்கு Covid-19 பரிசோதனையில் நேர்மறை முடிவுகளை பெற்றபின்னர் Omicron மாறுபாட்டின் இரண்டு சந்தேகத்திற்கிடமான வழக்குகள் இருப்பதாக ஹாமில்டன் பொது சுகாதார சேவைகள் திங்களன்று தெரிவித்தது.

டொரண்டோவில் நைஜீரியாவில் இருந்து திரும்பிய இரண்டு நபர்களுக்கும், சுவிட்சர்லாந்துக்கு சென்று வந்த மற்ற பயணிகளுக்கும் Omicron மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரேட்டர் டொரன்டோ மற்றும் ஹாமில்டன் பகுதியில் உள்ள அனைத்து சுகாதார பிரிவுகளிலும் 2 Omicron மாறுபாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.