கனடிய வீராங்கனை வரலாறு படைத்தார் – பென்னியின் பெற்றோர் பெருமிதம்

justin
Canada Lost Many peoples
  • கனடாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை பென்னி ஒலெக்ஸியாக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கத்தை வென்றுள்ளார்.
  • ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்று வரலாறு படைத்த நீச்சல் வீராங்கனை பென்னியை பாராட்டும் விதமாக பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட பல்வேறு பிரபலங்களும் வீராங்கனைக்கு ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
  • நீச்சல் வீராங்கனையின் பெற்றோரான ரிச்சர்ட் மற்றும் அலிசன் தனது மகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று வரலாறு படைத்தது பெருமிதமாக உள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் தனது மகளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினர்.
  • நீச்சல் வீராங்கனை பென்னியின் வெற்றியை கொண்டாடுவதற்காக திரும்பும்போது நாங்கள் அனைவரும் குடும்பமாக ஒன்றிணைந்து வேடிக்கையாக கொண்டாட்டம் அமையுமென்று ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.
  • தனது 21 வயது மகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கனடாவின் சார்பாக பங்கேற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் காரணமாக கனடாவின் மிகவும் பிரபலமான வீராங்கனையாக திகழ்கிறார்.
  • பென்னியின் ஏழாவது ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும். முந்தைய கனடாவின் விளையாட்டு வீரர்கள் ஆறு பதக்கங்கள் வரை பெற்றுள்ளனர். தற்பொழுது தனது மகள் 7 பதக்கங்களை வென்று அவர்களை முந்தி சென்றுள்ளார்
  • கனடாவிற்கு இது மிகச் சிறந்தது என்று தனது மகளின் வெற்றி குறித்து ரிச்சர்ட் தெரிவித்தார்.பென்னியின் தாயாரான ஆலிசன் ” தனது மகள் நினைத்த இலக்குகளை சிறப்பான முறையில் அடைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் ” என்று கூறினார்