அதிரடியாக விளையாடி வரும் கனடாவைச் சேர்ந்த வீரர்கள் – டோக்கியோ ஒலிம்பிக்

Canada ranked one of the most free countries in the world
Canada ranked one of the most free countries in the world

கனடாவிற்கு பதக்கங்கள் :

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது. சர்வதேச வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கின்றனர். கனடாவைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறி பதக்கங்களையும் வென்று வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் கனடாவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கனடாவைச் சேர்ந்த ஆன்ட்டி டி கிராஸ் இரண்டாவது தொடர்ச்சியான ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

 
அதிரடியான விளையாட்டு வீரர்கள் :

ஒன்டாரியோ மாகாணத்தை சேர்ந்த 26 வயதான மார்க்ஹாம் கடினமான ஆரம்பத்தை 9.89 நொடிகளில் ஓடி போட்டியில் மூன்றாவதாக வென்று தனித்துவமான இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

  • நாடுகள்                    வினாடிகள்                 வீரர்கள்                         பதக்கம்
    இத்தாலி                      9.80.                     லேமண்ட் ஜேக்கப்             தங்கம்
    அமெரிக்கா              9.84.                     பிரட் கெர்லி                           வெள்ளி
    கனடா                         9.89.                     மார்க்ஹாம்                         வெண்கலம்

2016 மற்றும் 2019 ஆகிய இரண்டு உலகச் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் 100 மீட்டர் ஓட்டத்தில் டி கிராஸ் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.அரையிறுதி போட்டியில் இரண்டாவதாகவும் ஒட்டுமொத்தமாக ஏழாவது ஆகவும் இடத்தைப் பிடித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க மேடையில் பதக்கம் வென்ற முதல் கனேடிய ஆண் என்ற சிறப்பு டீ கிராஸ்க்கு சேரும். கனடாவின் நீச்சல் வீராங்கனையான பென்னி தலைமையில் முந்தைய 13 பதக்கங்களையும் மகளிர் வென்றுள்ளனர்.