Covid-19 தடுப்பூசி சான்றிதழ்கள் – மறுப்பு தெரிவித்தார் ஜான் டோரி

 

john-tory
Toronto residents who are desperately hoping

ஒன்டாரியோ மாகாணத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு படிப்படியாக அறிவிக்கப்படும் நிலையில் மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் covid-19 தடுப்பூசி மருந்துகள் சீராக வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஒன்டாரியோ மாகாணத்தின் மிகப்பெரிய நகராட்சிகள் உள்ளூர் தடுப்பூசி சான்றிதழ்களை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. சான்றிதழ்களின் மூலம் மாகாணத்திற்குள் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை எளிதாக உறுதி செய்ய முடியும் என்று கூறியது.

பொது இடங்கள்,வணிகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை எளிதாக கண்டறிந்து அனுமதிக்க சான்றிதழ்கள் பெரிதும் உதவும் என்று கூறியது.

கனடாவில் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலையை தவிர்க்க தடுப்பூசி சான்றிதழ்கள் ஒன்ராறியோவில் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. மாகாணத்தின் பெரிய நகர மேயர்கள் “தடுப்பூசி சான்றிதழ்கள் அரங்கங்கள் ,பொது இடங்கள் ,வணிக வளாகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை உலகம் முழுவதும் பாதுகாப்பாக இயக்குவதற்கு பெரிதும் உதவுகின்றன ” என்று வெள்ளிக்கிழமையின் போது அறிக்கையின் வாயிலாக வெளியிட்டுள்ளனர் .

தடுப்பூசி சான்றிதழ் முறைகளை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் டெல்டா மாறுபாட்டில் இருந்து ஒன்டாரியோ மக்களை பாதுகாக்க முடியும் என்று OBCM அமைப்பின் தலைவர் ஜெஃப் அறிக்கையில் கூறினார்.அனைத்து துறைகளும் மீண்டும் திறப்பதன் மூலம் பொருளாதாரத்தின் மேம்பாடு பாதுகாப்பான முறையில் அமையும் என்று கூறினார்.

டொரன்டோ முதல்வர் ஜான் டோரி அத்தகைய திட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். வணிகங்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் போன்றவை அமைப்பிற்கு ஒருங்கிணைந்து அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் முதல்வர் டக் போர்ட் அமைப்பிற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். ” இது பிளவுபட்ட சமுதாயத்தை உண்டாக்கும்” என்று கூறினார்