கனடா – சீனா இடையேயான உறவு மோசமடைந்து வருவதாக கருத்து – மரண தண்டனை மனிதாபிமானம் அற்றது -பார்டன்

anadian citizens Michael
Detained Canadian citizens Michael Kovrig, left, and Michael Spavor, right, are due to go on trial in China.

சீனாவிலுள்ள பெய்ஜிங் தொழில்நுட்ப நிறுவனம் Huawei ஆகும். நிறுவனத்தின் நிர்வாகியை கனடா தடுத்து வைத்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள நிர்வாகியை விடுவிக்க கனடாவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக சீனா செயல்படுகிறது.

சீனாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள கனேடிய குற்றவாளியின் மரண தண்டனைக்கு சீன நீதிமன்றத்தில் கனடா மேல்முறையீடு செய்துள்ளது. கனடாவின் மேல்முறையீட்டை சீன நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

https://ca.tamilmicset.com/canada-tamil-news/death-penalty-for-4-canada-persons/

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கண்டித்து, ராபர்ட் ஷெல்லனுக்கு கருணை வழங்க வேண்டுமென்று முறையிட்டுள்ளது. ஈரானுடனான ஒப்பந்தங்கள் தொடர்பில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளின் காரணமாக சீனாவைச் சேர்ந்த மெங் வான்சோவை கனடா சிறை பிடித்தது. 15 வருட சிறைத் தண்டனைக்குப் பிறகு மரண தண்டனையாக அறிவிக்கப்பட்டது.

சீனாவின் மெங்கை விடுவிக்க கோரியதால், சீனாவில் உளவு பார்த்ததாக இரண்டு கனடியர்கள் மற்றும் தொழிலதிபர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணத்தில் உயர் மக்கள் நீதிமன்றம் ஷெல்லன் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டை நிராகரித்து , மரணதண்டனைக்கு முன்பாக சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் வழக்கு மறுஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

கனடிய தூதர் டோமினி பார்டன் “ராபர்ட்-க்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மனிதத் தன்மை அற்றது மற்றும் கொடுமையானது, அவர் வழக்கில் நீதிமன்றம் கருணை வழங்க வேண்டும் ” என்று நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை விசாரணையில் கனடாவிற்கு ஆதரவாக ஜெர்மனி, அமெரிக்கா ,ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் கலந்துகொண்டதாக கனடிய தூதர் பார்டன் கூறினார். கனடாவிற்கு ஆதரவு அளித்ததற்காக நாடுகளின் ராஜதந்திரிகளுக்கும் மற்ற அரசாங்கங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த வழக்கு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கும் உள்நோக்கம் கொண்டது என்று சீன அரசாங்கம் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.