உக்ரைனுக்கு ஆதரவாக டொரண்டோவில் அணிவகுப்பு – அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்பு ஒன்று கூடிய போராட்டக்காரர்கள்

toronto dundas square protest to support ukraine

கனடாவின் டொரன்டோ நகரில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக அங்குள்ள அமெரிக்க துணைத் தூதரக அலுவலகத்திற்கு முன்பு அணிவகுத்தனர்.

ரஷ்யாவின் இரக்கமற்ற கொடூரமான தாக்குதலையடுத்து ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் ரஷ்யாவின் துருப்புக்கள் உக்ரேனில் முன்னேறி வருவதால் உக்ரேனிய மக்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

டொரண்டோவில் உள்ள Dundas சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை உக்ரேனியர்களுக்கு ஆதரவாக அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கால தாமதம் ஏற்படலாம் என்பதால் சுமார் 100 பேர் உள்ளடங்கிய குழுவினர் ஒரு நாளுக்கு முன்னதாக கூடிவர முடிவு செய்துள்ளதாக துணை செயலாளர் தெரிவித்துள்ளார்.

“உக்ரேனிய மக்களுக்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை கவனிப்பதற்கு எங்களுக்கு கனடியர்கள் தேவை ” என்று டொரண்டோவின் இரண்டாவது முன்னணி நிறுவனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றும் செய்திகளை பார்ப்பவர்கள் எங்களுக்கு முக்கியம் என்றும் அவர் கூறினார்.

“உக்ரைனை குறிவைத்து 250 ஏவுகணைகளை ரஷ்யா அனுப்பியுள்ளது. புதன் கிழமையிலிருந்து தூக்கம் வரவில்லை. வியாழக்கிழமை அதிகாலை ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனின் தலைநகரை நோக்கி ராணுவத் துருப்புகளை அனுப்பினார். உக்ரைனில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் சிக்கி தவிப்பதை எண்ணி தனிப்பட்ட நரகத்திற்குள் சென்று கொண்டிருக்கிறோம் ” என்று அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்