பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி வாரியம் – பள்ளிக்குள் நுழைவதற்கு தடுப்பூசி சான்று அவசியம்

Ottawa
Canada schools debate how to act on common cold symptoms

கனடாவில் பெரும்பாலான மக்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டது. தடுப்பூசி விநியோகங்கள் அதிகரிக்கப்பட்டதால் மாகாணங்கள் முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் பல்வேறு துறைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் மிகப்பெரிய பொதுப்பள்ளி வாரியம், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்துகளை கட்டாயம் ஆக்குவதற்கு ஒருமனதாக வாக்களித்துள்ளது. டொரன்டோ மாவட்ட பள்ளி வாரியத்தின் அறங்காவலர்கள் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தடுப்பூசி மருந்து கட்டாயக் கொள்கைக்கு வாக்களித்தனர். இதனை டொரன்டோ மாவட்ட பள்ளி வாரியம் வியாழக்கிழமை அறிவித்தது.

பள்ளி வாரியத்தின் இத்திட்டம் எவ்வாறு செயல்படும் என்பது TDSB ஊழியர்களின் கைகளில் உள்ளது. பணியாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான செயல்முறைகளை ஊழியர்கள் உருவாக்குவார்கள். அனைவரும் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்.மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றை வழங்கவும் வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்த நடைமுறைகள் TDSB ஊழியர்களுக்கு மட்டும் அல்லாது பார்வையாளர்கள், பணியாளர்கள் மற்றும் அறங்காவலர்கள் போன்ற அனைவருக்கும் பொருந்தும் என்று TDSB செய்தி தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தடுப்பூசியின் சான்றை வெளிப்படுத்துவது மற்றும் வழங்குவது மட்டுமின்றி இரண்டாம் கட்ட தடுப்பூசியில் பெறும் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் ஒன்பதாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதற்கு முன்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் குறிக்கோளாக இருக்கும் என்று பள்ளி வாரியம் தெரிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாட்டு திட்டங்கள் பள்ளிக்குள் நுழைய விரும்பும் பெற்றோர்களுக்கும் பொருந்தும். கடந்த வருடம் Covid-19 வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளுக்குச் செல்வதற்கு பெற்றோர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.