ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் மக்களை தலிபான்கள் பாதுகாப்பாக அனுமதிக்க வேண்டும்; கனடா பிரதமர்.!

Pic: AP

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படும் அகதிகளின் எண்ணிக்கையை திங்கட்கிழமை வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் தீவிர தாக்குதலால் மக்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு கனடா விமானம் அனுப்பியுள்ளது.கனடாவில் தேர்தல் வாக்கெடுப்புகள் எதிர்நோக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானின் தீவிரவாத நெருக்கடிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Longueuil பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ , ஆப்கானிஸ்தானில் வாழும் கனடிய தூதரக பணியாளர்கள், சமையல்காரர்கள், காவலர்கள் போன்ற அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து தெரிவித்தார். மேலும் 80 கனேடிய ராஜதந்திரிகள் மற்றும் ஆயுத படைகளுடன் 807 ஆப்கானிய மக்களும் சிறப்பு குடியேற்றத் திட்டத்தின் கீழ் வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு சூழ்நிலை காரணமாகஎத்தனை அகதிகளுக்கு உதவி செய்தார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியிடவில்லை.

 

ஆப்கானிஸ்தானில் நிகழ்த்திவரும் வன்முறை மற்றும் கொடூரமான தாக்குதல்களை தாலிபான்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் மக்களை பாதுகாப்பாக அனுமதிக்க வேண்டுமென்று ட்ரூடோ தெரிவித்தார்.

கனடாவின் நட்பு நாடான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உட்பட ,காபூல் பகுதியை பாதுகாக்க கனடிய சிறப்பு படைகளின் உறுப்பினர்களுடன் அமெரிக்க படைகள் விமான நிலையத்தில் களத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

ஆப்கானிய மக்களுக்கு முடிந்தவரை உதவ, பிற நாடுகள் முன்வர வேண்டும். ஏற்கனவே வெளியேற்றப்பட்ட 807 ஆப்கானிய மக்கள் , ஆப்கானிஸ்தானில் கனடிய ஆயுதப் படைகள் மற்றும் தூதரக பணியில் பணியாற்றிய மொழிபெயர்ப்பாளர்கள், மற்றும் பிற துறைசார்ந்த ஊழியர்களின் குடும்பங்களை குடியேற்றம் செய்வதற்காக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்கீழ் உதவினர். ஏற்கனவே கனடாவிற்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் வந்துவிட்டதாக ட்ரூடோ தெரிவித்தார்.