ராணுவ அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு – குற்றச்சாட்டு குறித்த தகவல்கள் தனக்கு தெரியாது என்ற மேஜர் ஜெனரல் போர்டின்

rape

கனடா முழுவதும் covid-19 வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகிறது. Covid-19 வைரஸ் தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாப்பாக வைப்பதற்கு covid-19 தடுப்பூசி மருந்து முக்கியமானதாக அமைகிறது.

Covid-19 தடுப்பூசி மருந்து அனைத்து மாகாணங்களிலும் விரைவாக விநியோகம் செய்வதற்கு தலைமை அதிகாரிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் covid-19 தடுப்பூசி மருந்து விநியோக பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கிய ராணுவ அதிகாரி மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேஜர் ஜெனரல்.டேனி போர்டின் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்வதற்கு இந்த வாரத் தொடக்கத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று காலை Gatineu.,Que பகுதியில் காவல்துறையிடம் போர்டின் சரணடைந்தார்.

போர்டினின் சட்டக்குழு பலமுறை கோரிக்கை வைத்த போதிலும்,தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்த விவரங்கள் தனக்கு தெரியவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

போர்டின் தரப்பு வழக்கறிஞர்கள் 1988 ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டு என்ற தகவல்கள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்ததாக கூறியுள்ளனர்.

போர்டின் கடந்த மே மாதம், கனடாவின் பொது சுகாதார நிறுவனத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டார். Covid-19 தடுப்பூசி மருந்துகளை கனடா முழுவதும் விநியோகிப்பதில் ஏற்கனவே தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

குற்றச்சாட்டு வழக்கில் லிபரல் கட்சியின் தலையீடு இருப்பதாக போர்டின் சுட்டிக்காட்டி, கூட்டாட்சி நீதிமன்றத்தில் நீக்குவதற்கு போராடுகிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.தன் மீதான குற்றச்சாட்டு வழக்கு குறித்த தகவல்கள் தனக்கு தெரியவில்லை என்று போர்டின் கூறுவது அனைவருக்கும் கேள்விகளை எழுப்புவதாக கூறப்படுகின்றன