கனடாவில் பாஸ்போர்ட்டு சேவைக்காக காத்திருப்பவர்களுக்கு இனிய செய்தி – சர்வீஸ் கனடா அதிரடி அறிவிப்பு

passport Resident Visa
Resident Visa passport

சர்வதேச பயணிகள் தங்களது பாஸ்போர்ட்டை புதுப்பித்தலுக்கான கால அவகாசம் சர்வீஸ் கனடாவினால் நீட்டிக்கப்பட்டுள்ளது. கனடியர்கள் சர்வதேச பயணம் செல்லும்வரை அவர்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க காத்திருக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு காலாவதியான பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்க முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் covid-19 வைரஸ் தொற்று காரணமாக நாடுகளுக்கு இடையேயான விமான சேவை தடை செய்யப்பட்டிருந்தது. covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்து போடுபவர்களின் விகிதங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து மக்களிடையே விமானப் பயணத்திற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

2.3 மில்லியனுக்கும் அதிகமான பாஸ்போர்ட்டுகளை சர்வீஸ் கனடா covid-19 வைரஸ் தொற்று தொடங்குவதற்கு முன்பு வழங்கியுள்ளது. ஆனால் தற்பொழுது கிட்டத்தட்ட 363,219 பாஸ்போர்ட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களது பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்த பிறகு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். பல்வேறு நாடுகள் தங்களது எல்லைகளை திறந்துள்ளதால் அவசர பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்படுகின்றன.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிராக கனடிய அரசாங்கம் சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்கா முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு நவம்பர் மாதம் எட்டாம் தேதி எல்லையை திறக்கிறது. எனவே சர்வீஸ் கனடா பாஸ்போர்ட் சேவைகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது.

கனடாவில் பயணிகள் வலைத்தளத்தில் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்து 20 நாட்கள் வரை காத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலருக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.