மகனை இழந்த சோகத்தில் குடும்பம் – இரண்டு வருடங்களுக்குப் பின்னரும் மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு புலம்பிய பெற்றோர்

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜமால் பிரான்சிக் என்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். காவல்துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் அவரது குடும்பத்தினர் அவரது மரணத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து புலம்புகின்றனர்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி 28 வயதுடைய ஜமால் என்ற இளைஞரை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர். உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மிசிசாகாவில் வெள்ளிக்கிழமை இரவு அவரை கவுரவிக்க மற்றும் நினைவு கூறுவதற்கும் ஒருங்கிணைந்தனர்

ஜமாலின் தந்தை ” தனது மகனை இழந்து முதல் நாள் துடித்தது போலவே குடும்பத்தினர் இன்னும் துயரத்தில் உள்ளனர் ” என்று கூறினார். மேலும் “தன் மகனை இழந்த துயரத்தில் சாப்பிடாமல் தூங்காமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மகனை சுட்டுக்கொண்ட இவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும், இரவு உணவு உண்ண வேண்டும், புத்தாண்டினை வரவேற்க வேண்டும் ஆனால் நான் குடும்பத்தினரோடு மகனை இழந்த துயரத்தில் முதல்நாள் போலவே உடைந்து நிற்கிறேன் ” என்று வருத்தம் தெரிவித்தார்.

பிராந்திய காவல்துறையினரின் செயல்களால் குடும்பம் சீர்குலைந்து போனதாகவும், யாரேனும் ஒரு அதிகாரி பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஜமாலை அழைத்துச் சென்ற அதிகாரியை விசாரணை செய்து தண்டிக்குமாறு அவரது தந்தை கேட்டுக் கொண்டார்
சிறப்பு புலனாய்வு பிரிவு ஜமாலின் மரணத்தை விசாரணை செய்தது. துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தது