எம்பிக்களுக்கு வளாகத்திற்குள் அனுமதி கிடைக்குமா ? – கட்டாய தடுப்பூசி கொள்கை

blanchet parliament
mp yves

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெறவில்லை என்றால் ஹவுஸ் ஆப் காமன்ஸ் வளாகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் தேதி பாராளுமன்றம் மீண்டும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கனடாவில் அனைத்து கட்சிகளும் கட்டாய தடுப்பூசி மருந்து கொள்கையை ஆதரிக்கின்றன.ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டூல் எதிர்ப்பு தெரிவித்தார். தனி நபர்களின் தனிப்பட்ட சுகாதார முடிவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று விவாதம் செய்து வருகிறார்.

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே ஹவுஸ் ஆப் காமன்ஸ் வளாகத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்நாட்டு பொருளாதாரத்தின் அனைத்து கட்சி வாரியம் தீர்மானம் செய்துள்ளதாக சபாநாயகர் ஆண்டனி ரோட்டா தெரிவித்துள்ளார்.

உறுப்பினர் அலுவலகங்கள், பாராளுமன்றத்தில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் ஹவுஸ் ஆப் காமன்ஸ் வளாகத்திற்குள் உள்ளன. வளாகத்திற்குள் சமூக இடைவெளியை பின்பற்றும் நேரம் தவிர மற்ற நேரங்களில் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். பொதுமக்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

Covid-19 தடுப்பூசியில் இருந்து மருத்துவ விலக்கு பெற்றவர்களுக்கு வளாகத்திற்குள் விதிவிலக்கு அளிக்கப்படும். விரைவான ஆன்டிஜென் சோதனை எடுக்கப்படும்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் 119 பாராளுமன்ற உறுப்பினர்களில் 79 பேர் தங்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளனர். 38 பேர் தடுப்பூசி நிலை குறித்து பதிலளிக்கவில்லை.

கட்டாய தடுப்பூசி கொள்கைக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் யவ்ஸ் பிரான்கோயிஸ் ஆகிய இருவரும் தொலைபேசி உரையாடலின்போது ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.