“எங்களுக்கு இனி கியூபெக் மாகாணத்தில் எதிர்காலம் இல்லை ” – மாணவர்கள் மதச்சின்னங்களை அணிய கூடாது என்ற மசோதா

no future in quebec hijab ban bill 21

கியூபெக் மாகாணத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் மதச்சின்னங்களை அணிய கூடாது என்ற மசோதா சட்டத்தினை மாணவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று ஆராயும் ஒரு புதிய ஆய்வு ஒரு இருண்ட படத்தை வரைகிறது.கியூபெக் மாகாணத்தின் மீது பலரும் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் ,மாகாணத்தை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Montreal-ல் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு சமீபத்திய பட்டதாரிகள், இரண்டாம் நிலை மாணவர்கள் மற்றும் வருங்கால மாணவர்களிடம் Bill-21 மசோதா குறித்து அவர்களின் உணர்வுகளைப் பற்றி விசாரணை செய்தது.

இந்த மசோதா கியூபெக்கின் லாய்சிட்டி சட்டம் என்றும் அழைக்கப்படும்.ஜூன் 2019 ஆம் ஆண்டு இந்த மசோதா சட்டமாக மாறியது. இந்த சட்டமானது மதச் சின்னங்களை அணிவதற்கு தடை செய்தது. மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் மாகாணத்திற்குள் மதச் சின்னங்களை அணிவதற்கு தடையை அறிவித்தது.

பதிலளித்தவர்களில் 28 சதவீதத்தினர் மட்டுமே மாகாணத்திற்குள் மதச் சின்னங்களை அணிந்து இருப்பதாக கூறியுள்ளனர். மாகாணத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து இனவாதம் அதிகரிக்கப்பட்டதாக பலர் தெரிவித்துள்ளனர் .”எங்களுக்கு இனி கியூபெக் மாகாணத்தில் எதிர்காலம் இல்லை ” என்று பலரும் தெரிவித்ததாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.