அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான பயண வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் – தடுப்பூசி போடாதவர்களின் நிலை

Canada tops US as most attractive destination for foreign workers
Canada tops US as most attractive destination for foreign workers

Covid-19 நோய் தொற்று காரணமாக அமெரிக்கா – கனடா நில எல்லைகள் மூடப்பட்டிருந்தது. பின்பு முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்பொழுது covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடாதவர்கள் கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய அமெரிக்கா கூறியுள்ளது.

நோய்த்தொற்று கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் ரோஸெல் , வெளியுறவுத்துறை பயணம் புதிய வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் நோய் தொற்று அதிகரிப்பு விகிதத்தின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.
பயணம் செய்ய விரும்புபவர்கள் நாட்டில் ஏற்படக்கூடிய அபாயங்களை கருத்தில் கொண்டால், முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் முக கவசம் அணிய தயாராக இருப்பவர்கள் பயணம் செய்வது சரியானது என்று கூறினார் .

நில எல்லைக்குள் அனுமதிக்கும் திட்டத்தில் இரண்டாவது கட்ட நகர்வாக, ஆகஸ்ட் மாதத்தில் கனடாவின் முழு தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்க குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது.

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் covid-19 வைரஸ் தொற்றின் டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக கனடிய பயணிகளின் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு , தற்பொழுது அமெரிக்கா குறைந்தபட்சமாக செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை பராமரித்து வருகிறது.

முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் முக கவசம் அணிந்தவர்கள் பயணம் செய்யலாம் .நோய் பரவும் அபாயம் உள்ளது என்பதை பயணிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ரோசெல் கூறினார். பயண சுகாதார அறிவிப்புகளை வெளியிட்டு அவற்றை தினசரி சரிபார்த்து வருகிறோம். நாட்டிற்குள் நுழைவதற்கு நில எல்லைகள் வழியாக பயண வழிகாட்டுதல்களை வழக்குகளில் விகிதங்களை பொருத்து புதுப்பிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்