நான்காவது அலையின் தாக்கம் – தடுப்பூசி பாஸ்போட்டை அமல்படுத்துவதற்கு போர்ட் அரசாங்கத்துக்கு வலியுறுத்தும் லிபரல் கட்சியின் தலைவர்

steven liberal
liberal party

கனடாவில் பல்வேறு மாகாணங்களிலும் கட்சியின் தலைவர்களால் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தலை எதிர்நோக்கி நாட்டு மக்களிடம் பிரச்சாரத்தின் போது உறுதி மொழிகளையும் திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர்.

லிபரல் கட்சியின் தலைவர் டெல் டுகா எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கு குயின்ஸ் பூங்காவில் கூட்டத்தைக் கூட்டுமாறு முதல்வர் டாக் போர்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார் .கடிதத்தின் வாயிலாக செவ்வாய்க்கிழமை காலை முதல்வர் டக் போர்டுக்கு லிபரல் கட்சியின் தலைவர் டெல் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

தனிநபர்கள் அத்தியாவசியமற்ற வணிகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ்களை கட்டாயமான அணுகல் சான்றாக மாற்றுவதற்கான திட்டத்தை பிரிட்டிஷ் கொலம்பியா அறிவித்துள்ளது.

இலையுதிர் காலங்களில் அத்தியாவசியமற்ற நிகழ்ச்சிகளில் அணுகலை பெறுவதற்கு மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களில் அனுமதியை பெறுவதற்கு தடுப்பூசி மருந்து சான்றிதழை கட்டாயமாக்குவதற்கு கியூபெக் அறிவித்துள்ளது .

“நகராட்சி, வணிகம் மற்றும் கல்வி நம் அனைவரின் குறிக்கோள் ஒன்றே ஆகும். ஒன்டாரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலையை தடுப்பூசி மருந்துகள் வினியோகம் மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் மூலம் வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.மேலும் கூடிய விரைவில் covid-19 வைரஸ் தொற்றை வெல்ல முடியும் ” என்று டெல் டுகா அறிவுறுத்தினார்.

ஒன்ராரியோ மாகாணத்தில் “தடுப்பூசி பாஸ்போர்ட் ” முறையை நடைமுறைப்படுத்துவதற்கான அழைப்புகளை போர்ட் அரசாங்கம் பலமுறை நிராகரித்துவிட்டது. தற்பொழுது covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலையின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு சான்றிதழ் முறையை மறுபரிசீலனை செய்ய பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.