இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டமிட்டுள்ளார் -மூத்த வர்த்தக நிபுணரான கேமரூன் மேக்கே

canada tamil news

டெல்லியின் உயர் ஆணையராக கேமரூன் மேக்கே நியமிக்கப்படவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டமிட்டுள்ளார். கனடாவின் மூத்த வர்த்தக நிபுணரான கேமரூன் வர்த்தக தொடர்பு மூலம் இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தும் திட்டங்களுக்காக கனடிய பிரதமரால் நியமிக்கப்படவுள்ளார்.

கேமரூன் இந்தோனேசியாவுக்கான கனடாவின் தூதராக தற்போது பதவியில் உள்ளார். இருப்பினும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அனுபவம் கொண்டவர். கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகளின் தலைமை இயக்குனராக கேமரூன் பணியாற்றினார். எனவே பல தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைத்து ஆதரித்தார்.

இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வர்த்தக அமைச்சர் மேரியை இந்தியாவின் தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் இத்தாலியில் நடைபெற்ற G20 மாநாட்டின்போது சந்தித்தார்.

இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த தகவல்களை இரண்டு அமைச்சர்களும் விவாதம் செய்தனர். கடந்த ஜூன் மாதம் கனடா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் மீண்டும் சாத்தியமான உடன்படிக்கையை தொடங்கியது.

புதிய தொழில்நுட்பங்கள், எரிசக்தி, உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகள் போன்ற ஒத்துழைப்புக்கான முக்கிய பொருளாதார கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பியூஸ் கோயல் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2018 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தருவதற்கு முன்பு வரை கனேடிய அதிகாரிகள் அயல்நாட்டு முதலீடுகள், வர்த்தகம் போன்ற ஒப்பந்தத்தைப் பெற ஆர்வம் காட்டியுள்ளனர்.