இரண்டு கட்ட தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் – தடுப்பூசி சான்றிதழ் நடைமுறைக்கு வருகிற

Cineplex
Cineplex sells Toronto head office, aims to pay debt amid COVID-19 challenges

ஒன்ராரியோ மாகாணத்தில் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உணவு விடுதிகள் போன்றவற்றிற்கு செல்வதற்கு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோ உணவகங்களின் நிறுவனர்கள் மாகாண அரசாங்கத்தின் அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர். ஆனால் மூன்று வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரும் மாகாணத்தின் தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் முழுமையான விபரங்கள் இல்லாததால் குழப்பம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

Covid-19 இரண்டு கட்ட தடுப்புசி மருந்துகளையும் முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் பொது இடங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் அனைத்து ஒன்டாரியோ மக்களும் உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ,திரையரங்குகள் மற்றும் பல்வேறு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்பு மாகாண அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Covid-19 தடுப்பூசி மருந்துகளை முழுமையாக பெற்றதற்கான சான்றை காட்ட வேண்டும்.

தடுப்பூசி சான்று மற்றும் அதன் QR குறியீடுகள் சிரமமாக இருப்பதால் அவற்றை எளிதாக்கும் செயலில் மாகாண அரசாங்கம் ஈடுபட உள்ளதாக கூறுகிறது. தடுப்பூசி சான்றிதழ் திட்டம் கியூபெக்கில் புதன்கிழமை நடைமுறைக்கு வந்தது. தடுப்பூசி நிலையை வணிகங்கள் தீர்மானம் செய்ய QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு vaxicode பயன்பாட்டுடன் இணைந்து தொடங்கப்பட்டது .

வணிகங்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றிற்கு செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் தடுப்பூசி சான்று குறித்த முறையான வழிகாட்டுதல் ஆவணத்தை வழங்குவதாக மாகாண அரசாங்கம் உறுதியளித்துள்ளது. புதன்கிழமை கொடுக்கப்பட்ட ஆவணங்களில் முழுமையான விவரங்கள் இல்லாததால் நிறுவனங்களை பதற்றமடைய செய்ததாக ரிலெட் கூறினார்.

தடுப்பூசி சான்றிதழை சரி பார்ப்பதற்கு வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று காத்திருக்கக் கூடும். மேலும் எங்கள் பணியாளர்களுக்கு அதிக அளவில் பயிற்சி தேவைப்படும் அல்லது அதிக பணியாட்கள் வேலைக்கு சேர்க்க நேரிடும் என்று அவர் கூறினார்.