மருத்துவர் மாகாண அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டார்

covid19
ctv

கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. கல்கரி பகுதியில் Covid-19 வைரஸ் தொற்று பதிவுகள் குறைந்ததை தொடர்ந்து மாகாணத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

மாகாணத்தில் மீதமுள்ள Covid-19 சுகாதார கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு மாகாண அரசாங்கம் திட்டத்தை அறிவித்திருந்தது. இதுகுறித்து குழப்பம் மற்றும் கோபம் போன்றவற்றை ஆல்பர்ட்டா உயர் மருத்துவர் வெளிப்படுத்தினார். தற்பொழுது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை உயர் மருத்துவ அதிகாரி மருத்துவர் தீனா இன்ஷா மாகாணத்தில் மக்கள் பலரும் Covid-19 முடிந்துவிட்டதாக எண்ணுகிறார்கள் என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்த கருத்தினை வேறு எந்த நோக்கத்துடனும் கூறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அல்பேட்டா பகுதியில் மக்கள் 66% பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று மருத்துவர் ஹின்ஷா கூறினார்.தனிமைப்படுத்தும் நிகழ்வுகள் மற்றும் நோய்த்தொற்று அறிகுறி இல்லாத பரிசோதனைகள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தேவை இல்லை என்று அவர் கூறினார்.

மேலும் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி போட முடியாதவர்கள் அதிகப் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்த முறையில் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும்.

நாட்டில் covid-19 வைரஸ் தொற்று ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும். எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்கு பின்னர் covid-19 பரிசோதனையில் நேர்மறையான முடிவு பெற்றவர்கள் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதிலும் மாகாணத்தின் மருத்துவ வல்லுநர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.