மருத்துவர் சுமன் சக்கரபாணி எச்சரிக்கை – டெல்டா மாறுபாடு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை தேடுவதில் தீவிரம் காட்டி வருகிறது

Statistics Canada
Nine out of 10 Canadians have seen COVID-19 misinformation online: Statistics Canada

ஒன்டாரியோ மாகாணத்தில் covid-19 தொற்றுகள் பதிவாகி வருகின்றன. மாகாணங்கள் முழுவதும் covid-19 தடுப்பூசி மருந்துகள் விரைவாக வினியோகம் செய்து கட்டுப்பாடுகள் முறையை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒன்ராரியோ மாகாணத்தில் ஒரே நாளில் 423 covid-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆறு பேர் உயிரிழந்ததாக ஞாயிற்றுக்கிழமை பதிவாகியது. Covid-19 பரிசோதனைகளில் நேர்மறையான முடிவுகள் மற்றும் covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் கீழ் நோக்கி நகர்ந்த தொற்று எண்ணிக்கைகள் ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே சற்று அதிகரித்து வருவதை புள்ளி விவரங்களின் வாயிலாக அறியமுடிகிறது. தற்பொழுது வரை பதிவாகியுள்ள covid-19 தொற்றுகளின் ஏழுநாள் எண்ணிக்கை சராசரி 261 ஆகும். நேற்று ஏழு நாள் சராசரி 231 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மாகாணங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு தடுப்பூசி மருந்துகள் விரைவாக மக்களைச் சென்றடைந்த போது covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை சரிவை நோக்கி நகர்ந்தது. பல மாத சரிவுகளுக்குப் பின்னர் தற்பொழுது மீண்டும் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒன்டாரியோ மாகாணம் முழுவதும் உள்ள தொற்று எண்ணிக்கைகள் 2242 ஆகும். சென்ற வாரம் இந்த எண்ணிக்கை 1667 ஆக இருந்தது.ஜூன் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து covid-19 பரிசோதனை முடிவுகளில் நேர்மறை முடிவுகளை பெற்றவர்களின் சதவிகிதம் 0.2% உயர்ந்துள்ளது என்று புள்ளி விவர தகவல் வெளியிடப்பட்டது.

தொற்றுநோய்கள் நிபுணர் மருத்துவர் சுமன் சக்கரபாணி ” தீவிரமாக பரவி வரும் டெல்டா மாறுபாடு கனடா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் தொற்றின் வீரியத்தை அதிகரித்து வருகிறது, மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க முனைகிறது ” என்று டெல்டா மாறுபாட்டின் தீவிரம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.