வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை – எச்சரிக்கை செய்த டக் போர்டு

Ontario ford and christine eliot
Ontario ford and christine eliot

முதல்வர் டாக் போர்டு ஒன்டாரியோ நகராட்சி தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “நாம் இன்னும் covid-19 வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு வரவில்லை ” என்று கூறினார். ஒன்டாரியோவில் நகராட்சிகளின் சங்க மாநாட்டில் பிரதிநிதிகளுக்கான உரையில் இந்த கருத்தை திங்கட்கிழமை காலை டக் போர்டு தெரிவித்தார். Covid-19 வைரஸ் தொற்று தொடர்ந்து பரவிவரும் நிலையில் நாம் அனைவரும் பாதுகாப்புடன் எதிர்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மாகாணங்கள் முழுவதிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் covid-19 வழக்குகள் உயர்ந்து வருகிறது. நாட்டில் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலைக்கு இடையில் முதல்வர் டக் போர்ட் இந்த கருத்தை அறிவித்துள்ளார்.

ஒன்ராறியோவில் தினசரி பதிவாகும் covid-19 வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இல்லாத அளவிற்கு covid-19 வழக்குகள் தற்பொழுது பதிவாகி வருகின்றன. மக்களை அச்சுறுத்திவரும் டெல்டா மாறுபாடு தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

“தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை உருமாறிய வைரஸ் தொற்று எவ்வாறு கையாளும் என்பது தெற்கில் உள்ள மக்களை கவனித்து அறிந்து கொள்ள வேண்டும். மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உடனடியாக covid-19 தடுப்பூசி மருந்து குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் ” என்று முதல்வர் டாக் போர்ட் வலியுறுத்தினார்.

தடுப்பூசி மருந்துகள் விநியோகம் குறித்து போர்ட் தனது உரையின் போது பாராட்டுகள் தெரிவித்தார். “ஒன்டாரியோவில் இது சிறந்த முன்னேற்றம் ” இருப்பினும் covid-19 மாறுபாடுகளிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார்.