ரஷ்யாவுக்கு தடை அறிவித்த கனடா – உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ படைகள் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவிப்பு

russia ukraine war trudeau anitha anand chrystia freeland

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கு ஆதரவாக பல அறிவிப்புகளை செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டுள்ளார். தற்பொழுது உக்ரைன் எல்லையை சுற்றி ரஷ்யா தனது படைகளை குவித்து அச்சுறுத்தி வருவதால் கனடா தனது எதிர்ப்பினை படிப்படியாக வெளிப்படுத்தி வருகிறது.

ரஷ்யாவின் மாஸ்கோ உக்ரைனில் உள்ள இரண்டு மாவட்டங்களை சுதந்திர குடியரசாக அங்கீகரித்துள்ளது.ஒரு இறையாண்மை அரசின் மற்றொரு படையெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார் .

செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை அறிவித்தார்.ட்ரூவின் அறிவிப்பின் போது தேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜூலி ஆகியோர் உடன் இருந்தனர்.இவர்களுடன் துணை பிரதம மந்திரி கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் கலந்து கொண்டார்.அவர் உக்ரேனிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Donetsk மற்றும் Luhansk ஆகிய இரண்டு மாவட்டங்கள் மற்றும் இரண்டு ரஷ்ய நிதி நிறுவனங்களுடனும் கனடியர்கள் எந்த ஒரு வியாபாரத்தையும் செய்வதற்கு தடைகளை அறிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரஷ்யாவின் வெட்கக்கேடான நடவடிக்கைகள் உலகின் பாதுகாப்பு மற்றும் அமைதியை சீர்குலைத்து அச்சுறுத்தி வருகின்றன என்று கூறினார்.

ரஷ்யாவின் இறையாண்மை கடனை வாங்குவதற்கு கனடியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .ரஷ்யாவின் முறையற்ற ஆக்கிரமிப்பை எதிர்த்து கனடா எடுக்கும் முதல் நடவடிக்கை பொருளாதார தடை மற்றும் ஆயுதப்படைகளின் ஆதரவு ஆகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்