கனடா – அமெரிக்கா நிலை எல்லை – இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்பு அமெரிக்காவின் நடவடிக்கை

america canada border
canada

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக கனடா – அமெரிக்கா நில எல்லைகள் மூடப்பட்டிருந்தன.covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளின் விகிதங்கள் அதிகரித்துள்ளதால் எல்லையை கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கனடா – அமெரிக்கா நில எல்லைகள் வணிகங்களுக்கு திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சரக்குகள் எல்லையைக் கடக்கும் என்ற மகிழ்ச்சியில் மக்களும் வணிகர்களும் உள்ளனர்.

கனடாவில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு covid-19 பரிசோதனைகளில் எதிர்மறையான முடிவுகளை சமர்ப்பிக்க கூறுவது சுற்றுலா மற்றும் வணிக பயணங்களுக்கு தடையாக உள்ளது என்று கூறப்படுகிறது. தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்கும் நிலையில் எதிர்மறையான பரிசோதனை முடிவுகள் தேவையற்றதாக கருதப்படுகின்றன.

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எதிர்மறையான covid-19 பரிசோதனை முடிவுகளை வழங்குவதற்கு அவசியம் இல்லை என்றாலும் ,குடிமக்கள் கனடாவிற்குள் நுழையும்போது எதிர்மறையான பரிசோதனை முடிவுகள் தேவை என்று கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் சரக்கு போக்குவரத்து போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்காக கனடா – அமெரிக்கா நில எல்லைகள் உடனடியாக திறக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட போது அமெரிக்க அரசாங்கம் தனது எல்லையை உடனடியாக மூடியது. அதன் பின்னர் குடிமக்களின் அத்தியாவசிய தேவை ,நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதாரம் போன்றவற்றை உணர்ந்த அமெரிக்கா நில எல்லையை விரைவாக திறந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு செல்வதற்கு நில எல்லையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மிகுந்த சிக்கல்களை ஏற்படுத்துவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.