Covid-19 வைரஸ் தொற்று அபாயம்! – உயிரிழப்பு எண்ணிக்கைகளை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சகம்

Toronto Doctors

ஒன்டாரியோவில் Covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 565 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஐந்து மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் Covid-19 வழக்குகளின் சராசரி 355 ஆக இருந்தது.
383 Covid-19 வழக்குகள் நேற்று ஒரே நாளில் பதிவாகியுள்ளன. Covid-19 வைரஸ் தொற்று வழக்குகளின் ஏழு நாள் சராசரி தற்போது 390 ஆக உள்ளது.

ஒன்ராரியோ மாகாணத்தில் புதன்கிழமை 378 covid19 வழக்குகளும் ,வியாழக்கிழமை 438 வழக்குகளும் பதிவாகி இருந்தது.ஒன்டாரியோவில் அக்டோபர் 9ஆம் தேதிக்கு பிறகு பதிவாகியுள்ள அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெள்ளிக்கிழமை covid-19 வழக்குகளில் 249 பேர் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ,259 பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Covid-19 பரிசோதனைகளில் 1.8% நேர்மறையான முடிவுகளை பெறுகின்றன. 32 இறப்புகள் கடந்த வாரத்தில் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முதல் 9896 உயிரிழப்புகள் covid-19 வைரஸ் தொற்றால் நிகழ்ந்துள்ளன. கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் புதிய வழக்குகள் பதிவாகி வருகின்றன.

டொரன்டோ,ஹாமில்டன்,டர்ஹாம்,யார்க் மற்றும் பீல் போன்ற பிராந்தியங்களில் தினசரி புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. தடுப்பூசி விகிதங்கள் அதிகரித்து வருவதால் வைரஸ் தொற்றின் தாக்கத்தை விரைவில் கட்டுப்படுத்த இயலும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது