வின்னிபெக்கில் தனியாக நடந்து சென்ற பெண் வீட்டிற்குள் தள்ளிவிடப்பட்டு பாலியல் வன்கொடுமை!

Winnipeg
Winnipeg woman recovering after sexual assault in a breezeway

Winnipeg: கனடாவில் வின்னிபெக் சாலையில் சென்ற பெண்ணை தடுத்து நிறுத்தி அவரிடம் பேச்சு கொடுத்து ஒரு நபர், பின்னர் மிக மோசமான செயலில் ஈடுபட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வின்னிபெக்கில் உள்ள சாலையில் கடந்த 6 ஆம் தேதி காலை 8 மணியளவில் இளம்பெண்ணொருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்தப் பெண்ணை நபர் ஒருவர் தடுத்து நிறுத்தி பேச்சு கொடுத்தார். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக அருகில் உள்ள வீட்டுக்குள் தள்ளிவிட்டு அவரிடம் தவறாக நடக்க முயன்ருள்ளார்.

ஆனால் அங்கிருந்து அவர் தப்பி வெளியில் ஓடி வந்த போது விடாமல் துரத்திய நபர் அப்பெண்ணை கழுத்தை நெரித்து பின்பு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை காவல் துறையினர் வலைவீசி தேடி வந்த நிலையில் சமீபத்தில் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அங்குள்ள வணிக நிறுவனம் ஒன்றின் உதவியை நாடிய காவல் துறையினர், குற்றம் செய்த நபரை அவர்களின் துணையோடு எளிதில் கண்டறிந்தனர்.

சம்பவம் நடந்த நேரத்தில், அங்கு ஒருவர் வந்ததால், கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் அப்பெண் மீட்கப்பட்டுள்ளார். வெகு நேரம் யாரும் வராமல் இருந்திருந்தால், நிலை கைமீறி சென்றிருக்கக்கூடும் என காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படியுங்க: கொரோனா விதிமுறைகளை மீறினால் 2000 டாலர் வரைக்கும் அபராதம் செலுத்த நேரிடும்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.