Covaxin மதிப்பாய்வில் தாமதம் செய்யும் கனடா – உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த தடுப்பூசி மருந்து

பாரத் பயோடெக் நிறுவனத்தின் வட அமெரிக்க பங்குதாரர் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்காக ஹெல்த் கனடாவிடம் கோவேக்ஸின் தடுப்பூசியை சமர்ப்பித்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் இது தொடர்பான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்றும் யூகிக்க முடியவில்லை என்று அந்த நிறுவனம் கூறியது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி கனடாவில் கோவேக்ஸின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனத்தின் பங்குதாரரான அமெரிக்க நிறுவனம் Ocugen-ன் கனேடிய துணை நிறுவனமான Vaccigen ஆல் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

கனடாவில் கோவேக்ஸின் தடுப்பு ஊசி மருந்தினை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் எப்போது அகற்றுவார்கள் என்பது குறித்த தெளிவான விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

 

வியாழக்கிழமை தடுப்பூசி மருந்து குறித்து நிறுவனம் ட்வீட் செய்தது. ” தடுப்பூசி மருந்து குறித்த அனைத்து தகவல்களும் ஹெல்த் கனடாவால் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டவுடன் ஒரு முடிவு எடுக்கப்படும். மருத்துவ சான்றுகள் மற்றும் அறிவியல் நுட்பங்களின் அடிப்படையில் தடுப்பூசி மதிப்பாய்வு செய்கிறது ‘ என்று ட்விட்டரில் தெரிவித்தது.

உலக சுகாதார நிறுவனம் covaxin தடுப்பு ஊசி மருந்தினை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என்று கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தது. சர்வதேச நாடுகளிலிருந்து கனடாவுக்கான பயண நோக்கங்களுக்காக covaxin உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது.பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி மருந்துகள் மட்டுமே கனடாவில் நிர்வாகத்திற்கு கிடைக்கின்றன