கனடாவில் செப்டம்பர் 1 முதல் மாஸ்க் அணியாத பயணிகளுக்கு இதுதான் தண்டனை! உடனே பாயும் கடுமையான நடவடிக்கை!

WestJet
A Westjet employee assists a passenger at Calgary airport. The company has announced tough new rules related to wearing masks on its flights. (Colin Hall/CBC News )

கனடாவில் செப்டம்பர் 1 முதல் தனது நிறுவன விமானங்களில் முகக்கவசம் இன்றி பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது WestJet விமான நிறுவனம்.

கனடாவை சேர்ந்த விமான நிறுவனமான WestJet அறிவித்துள்ள இந்த தண்டனை, மற்ற விமான நிறுவனங்களை காட்டிலும் கடுமையானதாகும்.

விமானத்தில் முகக்கவசம் இன்றி பிடிபடுவோர் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதோடு, ஓராண்டுக்கு அவர்கள் WestJet நிறுவன விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்படும்.

முதலில் விமானப் பயணி முகக் கவசம் அணியாமல் அமர்ந்திருந்தால், விமான ஊழியர்கள் அவரை முகக்கவசம் அணியும் படி கேட்டுக்கொள்வார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்தால் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

அதற்கு பிறகும் அவர்கள் முகக்கவசம் அணிய மறுக்கும் பட்சத்தில், விமானம் புறப்படாமல் இருந்தால், உடனடியாக அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

ஒருவேளை விமானம் பறக்கும் போது, இப்படி செய்து, தொடர்ந்து பயணி முகக்கவசம் அணிய மறுத்தால், விமானம் புறப்பட்ட இடத்துக்குக்கே மீண்டும் திருப்பப்பட்டு அவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்படுவார்.

அதற்கு பிறகும் முகக்கவசம் அணிய மறுத்து விதண்டவாதம் செய்தால், அந்த பயணிகளுக்கு WestJet நிறுவன விமானங்களில் பயணிப்பதற்கு ஓராண்டு வரை தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தவிர, செப்டம்பர் 1 முதல் WestJet நிறுவன விமானங்களில் பயணிப்போர், தங்கள் முகவரி முதலான விவரங்களையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

விமானத்தில் பயணிக்கும் யாருக்காவது கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தால், அவர்களை எளிதில் சுகாதார அதிகாரிகள் கண்டுபிடிப்பதற்கு வசதியாக இருக்கும்.

Haleema : கனடாவில் டொராண்டோவை சேர்ந்த இளம்பெண் கைது! வெளியான அதிர்ச்சிப் பின்னணி!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms