குறையாத தொற்று தாக்கம்! 4 கனடிய விமான நிலையங்களுக்கான சேவையை இரத்து செய்த நிறுவனம்!

China
china flights

4 கனடிய விமான நிலையங்களுக்கான சேவையை வெஸ்ட் ஏர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

Covid-19 தொற்று காரணமாக வான்வழி பயணம் தேவைகள் குறைந்து வருகின்ற நிலையில் தற்காலிகமாக சேவை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செயின்ட் ஜான்ஸ், ஒன்டாரியோ, அல்பேட்டா ஆகிய பகுதிகளின் விமான நிலையத்திற்கான விமான சேவையை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பகுதிகளுக்கு மார்ச் 19 முதல் ஜூன் 24ம் தேதி வரை இந்த தற்காலிக நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இன்று 3316 பேருக்கு புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன.

ஒன்டாரியோ பகுதியில் ஆயிரத்து 38 பேரும், கியூபெக் பகுதியில் 900 பேருக்கும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 617 பேரும், அல்பேட்டா பகுதியில் 415 பேரும், ஸ்கெட்ச்வானில் 146 பேரும், மணிடோபா பகுதியில் 39 பேரும் இன்று வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒன்டாரியோ பகுதியில் 44 பேரும், கியூபெக் பகுதியில் 10 பேரும், அல்பேட்டா பகுதியில் ஏழு பேரும், மணிதொபா பகுதியில் இரண்டு பேரும் என்று இன்றைய மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதுவரை கனடாவில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 497 பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

21498 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் கனடாவில் இதுவரை 7 லட்சத்து 83 ஆயிரத்து 312 பேர் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க: ஒரே ஒப்புதல்! ஜூன் மாத இறுதிக்குள் 24.5 மில்லியன் கனடியர்கள் பலன் பெறப்போகும் திட்டம்!