செயற்கைக்கோள் தகவல் அடிப்படையில் கனடா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

avalanche
Avalanche Canada issues warning covering most eastern B.C.

கனடா மக்கள் இரண்டு விதமான நிலையை எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். பனிப்பொழிவு நிறைவடைய போகிறது என்பது நல்ல செய்தியாகும்.

அதே வேளையில்  பனிப்பொழிவு இன்னும் இடைவிடாமல் காலையில் தொடங்கி நற் பகலில் கூட அடித்துக்கொண்டு உள்ளது என்பது கவலைக்குரிய செய்தியாகும்.

ரேடார் கருவி மூலம் செயற்கைக்கோளில் இருந்து பெறப்பட்ட வானிலை பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் பனிப்பொழிவு வேகமாக கிழக்குப் பகுதியை நோக்கி நகர்வதாக வானிலை பதிவுகள் குறிப்பிடுகின்றன.

கனடாவின் கிங்ஸ்டன் பகுதியில் இருந்து ஒட்டாவா பள்ளத்தாக்கை நோக்கி பனிப்பொழிவு நகர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த பனிப்பொழிவு நயாகரா நீர்வீழ்ச்சியை கடந்து செல்லும் என்று சுற்றுச்சூழல் கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இன்னும் சில இடங்களில் பனிப்பொழிவு நம்மால் காண முடிகிறது. அது லேக் விளைவு என்று கூறுகின்றனர். ஏனெனில் காற்றின் திசைவேகம் ஆனது வடக்கிலிருந்து வடகிழக்குக்கு செல்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

கனடாவின் ஹேமில்டன் பகுதியில் காற்று அடுக்குகளால் ஆனது ஒரு மணி நேரத்திற்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதாக வானிலை அறிக்கையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனிப்பொழிவு வடக்கிலிருந்து வடகிழக்கு பகுதியை நோக்கி செல்வதால் நயாகரா நீர்வீழ்ச்சியை கடந்து செல்கிறது. அதனால் கனடா முழுவதும் பனிப்பொழிவு -7 என்ற அளவில் இருக்கும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவிக்கிறது.

இதையும் படியுங்க: காலநிலை எச்சரிக்கை! ஒன்டாரியோ மாகாண பாடசாலைகள் திறக்கும் நேரத்தில் கனடா எதிர்கொள்ளும் சிக்கல்!