வைரலான வீடியோ காட்சிகளால் கடும் கோபம் கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ – கனடிய பயணிகள் மெக்சிகோவில் தவிப்பு

Justin Trudeau
canada says PM Justin Trudeau

மெக்சிகோவில் ஒரு உணவகத்திற்கு செல்லும் வழியில் தொலைக்காட்சி பிரமுகர்களின் covid-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து கனேடிய விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு அதிர்ச்சியான தகவல்களை அறிவித்துள்ளன .

கனடாவிற்கு திரும்பும் பயணத்தில் தொடர்புள்ள பயணிகளை விமானத்தில் ஏற அனுமதிக்கமாட்டோம் என்று கனடாவின் மூன்று பெரிய விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கனடாவின் கியூபெக்கிலிருந்து மெக்சிகோ நகரத்திற்கு பறக்கும் சன்விங் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளால் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கோபம் கொண்டார். வைரலான வீடியோ காட்சிகளில் விமானத்திற்குள் பயணிகள் முக கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக இருந்தனர். சிலர் குடித்துக் கொண்டிருந்தனர்.

கனடாவில் covid-19 வைரஸ் தொற்று நோய் பரவலின் ஐந்தாவது அலையின் தீவிரத்தைப் பற்றி உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமானத்தில் பயணித்த பயணிகளின் செயல்கள் முழுவதும் பொறுப்பற்று இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி பயணம் செய்த அந்த 150 பயணிகள் தற்போது மெக்சிகோவில் சிக்கியுள்ளனர். வீடியோ காட்சிகள் வைரல் ஆனதால் விமானம் கனடாவிற்கு திரும்புவதை ரத்து செய்தார்.ஏர் டிரன்ஸட் மற்றும் ஏர் கனடா ஆகிய விமான நிறுவனங்களும் பிரதமரின் அறிவிப்பை பின்பற்றியுள்ளன.

நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் பயணிகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு முறையாகும். நிறுவனத்தின் அடிப்படை கடமைகளின் கீழ் கட்டுப்படாத பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு மறுக்கப் படுவார்கள் என்று ட்விட்டரில் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது