கனடாவில் சுமார் 1,000 தொழிற்சங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள நிறுவனம்!

Via Rail Canada
Via Rail Canada employee lose job (CTV)

கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக Via Rail Canada நிறுவனம் சுமார் 1,000 தொழிற்சங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

பணி நீக்கங்கள் நடவடிக்கை வரும் ஜூலை 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு தற்காலிகமாக எழுதப்பட்ட பணிநீக்க அறிவிப்பு வரும் என்று மொன்றியலை தலைமையிடமாக கொண்ட Via Rail Canada நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது அந்நிறுவனம் தனது சேவை மீட்டெடுக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பணிநீக்க நடவடிக்கை தற்காலிகமானது தான் என்றும், வாடிக்கையாளர் சேவை அதிகரிக்கும்போது பணியாளர்களை மீண்டும் அழைத்துக் கொள்ளத் அந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms