வென்டிலேட்டர் மூலம் சுவாசம் – Covid-19 வைரஸ் தொற்றினால் ஒன்ராரியோ மாகாணத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள்

corona virus in canada justin trudeau n95 mask covid 19

ஒன்ராரியோ மாகாணத்தின் மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் covid-19 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள வழக்குகளின் சுமை ஒப்பீட்டு அளவில் நிலையானதாக இருப்பதால் ,ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 56 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன .சனிக்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 600 ஆக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 604 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள சுமார் 374 நோயாளிகள் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்கின்றனர்.ஒரே வாரத்தில் ஒன்ராரியோ மாகாணத்தில் Covid-19 வைரஸ் தொற்று காரணமாக 299 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய மரணங்களில் 7 இறப்புகள் நீண்ட கால பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்களை உள்ளடக்கியதாகும் .

உட்புற உணவு, உடற்பயிற்சி மையங்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவை எட்டு நாட்களில் அதாவது பிப்ரவரி மாதம் முதல் ஒன்றாரியோ மாகாண முழுவதும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. மாகாணம் முழுவதும் உள்ள ஆய்வகங்கள் 32247 Covid-19 பரிசோதனைகளை செயல்படுத்தி அவற்றில் 18% சதவீதத்திற்கும் மேற்பட்ட நேர்மறையான முடிவுகளை வெளியிட்டுள்ளன.

பிசிஆர் மூலக்கூறு பரிசோதனையின் மூலம் செயல்படுத்தப்பட்டு Covid 19 உறுதி செய்யப்பட்ட வழக்குகளில் 835 பேர் தடுப்பூசி போடாதவர்களும் ,223 பேர் பகுதி அளவு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களும் ,600 பேர் தடுப்பூசியின் நிலை அறியாதவர்களும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.