ஒன்றாரியோ மளிகை கடையில் துப்பாக்கிச் சூடு – இறப்பில் முடிந்த முகக்கவச மோதல்!

valu-mart
Ontario valu mart gun shot

ஒன்ராறியோவில் உள்ள ஹலிபர்டன் கவுண்டி பகுதியில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், தானியங்கி துப்பாக்கி மற்றும் ஒரு சாதாரண துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

இது ஒரு மளிகை கடையில் முகக்கவசம் அணிய மறுத்த ஒருவரை விசாரிக்கும் போது , பிரச்சனை தொடங்கியது ஒன்றாரியோவின் காவல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் மைண்டன் டவுன்ஷிப்பில் நெடுஞ்சாலை 35ல் உள்ள வாலுமார்ட் கடையில்  தொடங்கி, சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் ஹாலிபர்டன் கிராமத்திற்கு கிழக்கே இந்தியன் பாயிண்ட் சாலையில் உள்ள ஒரு குடியிருப்புக்கு அருகில் முடிந்தது.

முகக்கவசம் அணிய மறுத்த ஒரு நபர் இருப்பதாகவும், அவர் கடையில் பலரைத் தாக்கியதாகவும் வந்த ஒரு புகாரைத் தொடர்ந்து, காலை 8 மணியளவில் அதிகாரிகள் மளிகை கடைக்கு அழைக்கப்பட்டதாக ஒன்றாரியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தியன் பாயிண்ட் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில், வாகனத்தின் உரிம அட்டையை பயன்படுத்தி, அதிகாரிகள் அந்த நபரை கண்காணித்தனர்.

குற்றவாளி அப்பகுதியை அடைந்த போது, சிறப்பு புலனாய்வு பிரிவில் உள்ள இரண்டு அதிகாரிகள் அந்த நபரை நோக்கி தங்கள் துப்பாக்கிகளால் சுட்டனர்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் காலை 11 மணிக்கு இறந்துவிட்டதாக சிறப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

அவரது குடும்பத்தினரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறும் அதிகாரிகள், அவரது அடையாளம் பற்றி குறிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.