ஒவ்வாமையின் காரணமாகவும் ரத்தக்குழாய் அடைப்பு – கனடாவில் தடுப்பூசியால் உண்டான ஒரே பாதிப்பு!

Ontario
Ontario Lockdown

கனடாவில் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகளை ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

55 லிருந்து 64 வயது வரை உள்ளவர்களுக்கு அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது 55 வயது கீழ் பட்டவர்களுக்கும் அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்து செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பு கருத்துக்கள் எழுந்த நிலையில் அதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹெல்த் கனடா இது பாதுகாப்பான தடுப்பூசி மருந்து என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் கியூபெக் மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்டியன் டுபே மாகாணம் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பு ஊசி மருந்தினை 55 வயதுக்கும் கீழ் பட்டவருக்கு செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாணங்கள் அனைத்தும் வயது வரம்புகளை ரத்தக்குழாய் அடைப்பு போன்ற சில உடல் உபாதைகளில் அடிப்படையிலேயே அறிவித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 55 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பு ஊசி மருந்து செலுத்தி அதன் மூலமாக ஒவ்வாமையின் காரணமாகவும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டதாக ஒரே ஒரு பதிவு மட்டும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அல்பேட்டாவின் தலைமை சுகாதார அமைச்சர் ஆன மருத்துவர் தீனா இன்ஷா 55 வயதுக்கு உட்பட்டவர்கள் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்கு மாகாண ஆலோசனை குழுமத்திடம் ஆலோசித்த பின்னரே அறிவிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.