கனடாவிற்கு 6 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வருவதில் ஏற்பட்ட திடீர் தடை!

AstraZeneca vaccine
Ontario premier says new age recommendations for AstraZeneca vaccine

கனடாவிற்கு தடுப்பூசி மருந்துகள் பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டு வருகின்றன.

மத்திய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்தவாறு மே மாத இறுதிக்குள் அனைத்து தடுப்பூசி மருந்துகளையும் பெற்றுக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பானது, தற்பொழுது தடுப்பூசி மருந்து தாமதத்தால் இடைநிறுத்த நிலையில் உள்ளது.

அறிவிக்கப்பட்டிருந்த படி கனடாவிற்கு ஏறத்தாள 6 லட்சம் தடுப்பூசி மருந்துகளை வரவழைப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளது.

அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொள்வதிலேயே தாமதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகள் தற்பொழுது ஒன்டாரியோ மாகாணத்திற்கு அதிக அளவில் தேவைப்படுகிறது.

ஏனெனில் ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் தடுப்பூசி மருந்து பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுவதன் மூலமாக ஒன்டாரியோ மாகாணம் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்ற காரணத்தால் எதிர்ப்பு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றது.

ஒரே நாளில் மட்டும் ஒன்டாரியோ மாகாணத்திற்கு 389000 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டமாக வரவழைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கையானது 194000 ஆகும்.

இருப்பினும் மே மாதத்தில் குறிப்பிட்ட தேதியில் இருந்தே அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி மருந்து தாமதமின்றி வரவழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை தடுப்பூசி மருந்துகள் பெற்றுக்கொள்வதற்கு இடையூறுகளை சமாளிக்கும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் வயது வரம்பு குறைக்கும் திட்டத்தை தற்பொழுது மாகாண அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது