கனடாவில் கொரோனா பாதிப்பு ஒரு மில்லியனை கடந்த நிலையில் தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை!

COVID19
COVID19 Canada

கனடாவில் கொரோனா பாதிப்பு ஒரு மில்லியன் எண்ணிக்கையைத் தாண்டி சென்றுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே பல நாடுகளிலும் இருந்து பெற்றுள்ள தடுப்பூசி மருந்துகள் தற்பொழுது பற்றாக்குறை நிலையில் உள்ளதால், மேலும் 2 மில்லியன் கரோனாதடுப்பூசி மருந்துகள் பெற்றுக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 மில்லியன் தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கையில் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜனகா வகை தடுப்பூசி மருந்துகளும் உள்ளடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவகை தடுப்பூசி மருந்துகளின் முதல் தொகுதியில் உள்ளடக்கப் படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று லட்சத்து 16 ஆயிரத்து 800 தடுப்பூசி மருந்துகள் கனடாவிற்கு கிடைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 400 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தடுப்பூசி மருந்துகள் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து தடுப்பூசி மருந்துகளும் பெற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்று தடுப்பூசி மருந்துகளை கனடிய மக்கள் அனைவரும் தவறாது பெற்றுக்கொண்டு பயனடைய வேண்டும் என்று கனடா அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிற நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள் அனைத்தையும் முறையே வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது.

தடுப்பூசி மருந்துகள் அனைத்தையும் கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படாது என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை முறையை பின்பற்றி மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அரசாங்கத்தின் விதிகளுக்கு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.