வேகமெடுக்கும் கொரோனா பரவல்! ஒன்ராறியோவில் 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 695 பேருக்கு தடுப்பு ஊசி!

covid19

ஒன்ராறியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று தொடர்ந்து பரவி வருவதால் மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் நடவடிக்கைகளும் தொடர்ந்து அமலில் உள்ளன.

இதனையடுத்து மாகாண அரசாங்கம் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அதிகரித்து உள்ளது.

மேலும் covid-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மருந்துகளை விரைவாக வினியோகம் செய்வது முக்கிய பங்காற்றும் என்று பல்வேறு தரப்பினர் கருதியுள்ளனர்.

எனவே ஒன்ராரியோ மாகாணத்தில் தடுப்பூசி மருந்துகள் செலுத்துவதற்கான வயது வரம்பினை குறைத்து, விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கான செயல்பாடுகள் நடந்து வந்தது.

தற்பொழுது ஒன்ராரியோ மாகாணத்தில் தடுப்பூசி மருந்துகள் பெரும்பாலானோருக்கு செலுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே நாளில் தடுப்பூசி மருந்துகள் ஒன்றாரியோ மாகாணத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு மிக விரைவாக தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டதன் விளைவாக தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்ட பதிவுகளில் அதிக எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 695 பேருக்கு தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தி இருப்பதாக பதிவுகள் கூறுகின்றன.

இந்த பதிவு கடந்த நாட்களைவிட அதிகமான பதிவாகும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவினை நேற்றைய பதிவோடு ஒப்பிடும் பொழுது சுமார் 46 ஆயிரம் பேருக்கு அதிகமாக செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பின் படி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்பட அனைவரும் 40 வயதிற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆவர்.