Covid-19 தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்து கனடாவிற்குள் நுழைய அனுமதி

corona
Canada Corona Vaccine

குறைந்து வரும் covid-19 :

கனடா முழுவதும் covid-19 தடுப்பூசி மருந்துகள் விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. தொற்று எண்ணிக்கையைப் பொருத்து மாகாணங்கள் கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒன்டாரியோ மாகாணத்தில் பதிவாகி வரும் covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஏழு நாட்களுக்கான வைரஸ் தொற்றின் சராசரி எண்ணிக்கையானது எந்தவித மாற்றமும் இன்றி அதே நிலையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை பதிவாகியுள்ள covid-19 வைரஸ் தொற்றின் எண்ணிக்கை 127 ஆகும். அதற்கு முந்தைய நாள் 130 ஆக பதிவாகி இருந்தது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கனடாவில் அதிக அளவில் தடுப்பூசி மருந்துகள் வினியோகம்

தற்பொழுது ஏழு நாள் சராசரி வீதம் 152 ஆக பதிவாகியுள்ளது. கடந்த வாரம் ஏழு நாட்களுக்கான சராசரி 170 ஆக பதிவாகியுள்ளது. தடுப்பூசி செலுத்துதல் மற்றும் covid-19 கட்டுப்பாடுகள் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிப்பதால் வைரஸ் தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது என கருத்துக்கள் வெளியாகின்றன.

ஆகஸ்ட் மாதம் அமெரிக்கர்களுக்கு அனுமதி :

ஆகஸ்ட் 9ஆம் தேதி முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட அமெரிக்கர்கள் கனடாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என்று கனடிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவிற்குள் வரும் பயணிகளை செப்டம்பர் ஒன்பதாம் தேதி அனுமதிக்கலாம் என்று தெரிவித்தது.

இந்த அறிவிப்பு நியாயமானதாக இருக்கிறது என்று தொற்றுநோய் வல்லுனர் மருத்துவர் ஐசக் செய்தியாளர்களிடம் கூறினார். கனடாவிற்குள் வருவதற்குமுன் எதிர்மறையான பரிசோதனை முடிவுகளை பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.