இக்கட்டான நேரத்தில் கனடாவிற்கு அமெரிக்கா செய்த கைமாறு! மனம் நெகிழும் பிரதமர்!

justin
Canada Lost Many peoples

கனடாவில் covid-19 வைரஸ் தொற்று பதிவுகள் எண்ணிக்கையானது உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில், தற்பொழுது ஊரடங்கு மற்றும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற கட்டுப்பாடுகளின் காரணமாக வைரஸ் தொற்று பதிவுகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.

மேலும் கனடா அரசாங்கம் தடுப்பூசி மருந்துகளான மாடர்னா ,அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் பைசர் ஆகியவற்றை பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகித்து வருகிறது.

அமெரிக்க நிறுவனமான மாடர்னா தடுப்பூசி மருந்துகள், இதுவரை சுமார் 1.5 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை கனடாவிற்கு இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டு அதிபரான ஜோ பைடன் அவர்கள் தலைமையில் உள்ள அமெரிக்க அமைச்சகம் அனுமதி அளித்தது மிகவும் பயன் அளித்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

Covid-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழி தடுப்பூசி மருந்து போட்டுக் கொள்ளுதல் ஆகும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பல்வேறு தரப்பிலான நிகழ்வுகளுக்கும் ஒன்றிணைந்து செயல்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பர நல்லுறவில் திகழ்ந்து இருப்பதை இக்கூற்று புலப்படுத்துகிறது.