உக்ரேனியர்களுக்கு ஒன்டாரியோவில் வேலைவாய்ப்பு – கனடா இருகரம் நீட்டி உக்ரைனை வரவேற்கும்

DOUG FORD
DOUG FORD

உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பித்து பிற நாடுகளுக்கு புலம்பெயர்வதற்கு மக்கள் முயற்சித்து வருகின்றனர்.உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் மக்களுக்கு கனடா இருகரம் நீட்டி வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் உக்ரேனிய மக்களுக்கு உதவும் வகையில் வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒன்ராரியோ மாகாணத்தில் தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதால் உக்ரேனியர்களின் திறமை வரவேற்கப்படும் என்று கூறினார்.

ரஷ்யாவின் கடுமையான தாக்குதலிலிருந்து பிழைத்து அகதிகளாக வருபவர்களுக்கு ஒன்ராரியோ மாகாணத்தில் எளிதாக குடியேறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெடரல் அரசாங்கம் செய்து தர வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறினார்.

உக்ரைனில் இருந்து வரும் மக்களுக்கு ஆதரவாக நிற்பதில் ஒண்டாரியோ மாகாணம் முன்னணியில் நிற்கும் என்று கூறிய Ford ,கடினமாக உழைக்கும் உக்ரேனியர்களுக்கு இங்கு எப்போதுமே வரவேற்பு உண்டு என்று தெரிவித்தார். மேலும் தொழிலாளர் துறை அமைச்சரான Monte McNaughton ,இதுதொடர்பாக புலம்பெயர்தல் துறை அமைச்சருடன் பேசியுள்ளதாக தெரிவித்தார்.

உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு ஒன்டாரியோ நிறுவனங்கள் 20000 பணியிடங்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து புலம்பெயர்பவர்களை விரைவில் ஒன்டாரியோவில் குடியமர்த்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்குமாறு McNaughton புலம்பெயர்தல் அமைச்சருடன் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்