சூரியகாந்தி விதை விற்பனை மூலம் உக்ரைனுக்கு ஆதரவு – தேசிய மலர் என்பது சிறப்பிற்குரியது

ukraine nation flower sunflower seed canadian red cross

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலை தொடங்கியதிலிருந்து லட்சக்கணக்கான உக்ரேனிய மக்கள் நாட்டிற்க்குள்ளேயே இடம்பெயர்ந்தனர்.மேலும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் உக்ரேன் எல்லையை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். உக்ரைனில் நெருக்கடியில் தவிக்கும் மக்களுக்கு கனடியன் செஞ்சிலுவை சங்கம் அடிப்படை உதவிகளை வழங்கிவருகிறது.

Saks என்பவர் West Coast Seeds நிறுவனத்தின் தலைவர் ஆவார். கனடாவின் வான்கூவர் நகரத்திற்கு அருகில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் Ladner பகுதியில் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது .உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவதற்கு நிதி திரட்ட நினைத்த நிறுவனத்தின் தலைவர் அருமையான திட்டத்தை உருவாக்கினார்.

தனது நிறுவனத்தில் மார்ச் மாதத்தில் விற்பனையாகும் சூரியகாந்தி விதைகளின் வருமானத்தில் 100 சதவீதத்தையும் கனடிய செஞ்சிலுவைச் சங்கமான உக்ரைன் மனிதாபிமான நெருக்கடி முறையீட்டுக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக கூறினார். உக்ரேனின் தேசிய மலர் சூரியகாந்தி என்பது சிறப்பிற்குரியதாகும்.

உக்ரேனில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாக இருக்கும் கனடிய மனிதாபிமான அமைப்பிற்கு உறுதுணையாக இருக்க விரும்பியதாக Saks கூறினார். அவர்களின் பிரச்சாரம் ஆரம்பத்தில் $21000 டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ஆனால் அந்த நிதியை வைத்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே, உக்ரைனில் தொண்டு செய்யும் கனடிய அமைப்பிற்கு ஆதரவாக நிதி திரட்டுவதற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும் என்று நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.