யு எச் என் நோய்த்தொற்று நிபுணர் ஐசக் செய்தியாளர்களிடம் பேச்சு

COVID19
COVID19 Canada

ஒன்ராரியோ மாகாணத்தில் வெள்ளிக்கிழமை 159 புதிய covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. Covid-19 வைரஸ் தொற்றால் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மாதங்களில் முதல்முறையாக உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் இரவு விடுதிகள் போன்றவை கட்டுப்பாடுகளுடன் ஒன்ராரியோ மாகாணத்தில் மீண்டும் இயங்குகிறது.

 

  • கடந்த 7 நாட்களில் பதிவாகியுள்ள covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கையும் சராசரி பதிவு:
    வெள்ளிக்கிழமை 151
    வியாழக்கிழமை 155
    புதன்கிழமை 153
    செவ்வாய்க்கிழமை 146

 

Covid-19 பரிசோதனைகள் :
ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள ஆய்வகங்கள் சுமார் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட covid-19 பரிசோதனைகளை செய்ததில் குறைந்தபட்சமாக 0.6% மட்டுமே நேர்மறை முடிவுகளை பெற்றுள்ளது.

 

மாகாணம் முழுவதும் பதிவாகியுள்ள தொற்றின் எண்ணிக்கை 1403 ஆக குறைந்துள்ளது. 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஒன்டாரியோ மாகாணத்தில் மார்ச் மாதம் 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை 9285 பேர் covid-19 வைரஸ் தொற்றின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும் 537000க்கும் மேற்பட்டோர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

 

யூ ஹெச் என் நோய்த்தொற்று நிபுணர் ஐசக் ” நீங்கள் முக கவசம் அணியாமல் வீட்டுக்குள் ஒருவரை அனுமதிக்கும் போது, சமூக இடைவெளி இன்றி ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவது போன்ற செயல்களை செய்யும்பொழுது மாகாணங்களில் வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதை நாங்கள் காண்போம் என்பதில் ஆச்சரியமில்லை ” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.