கனடாவில் காதலர் தினத்தில் ஒரே நேரத்தில் இணையாக இரு பெண்கள் செய்த சாதனை!

music
Lover Day Record

பிப்ரவரி 14 உலக காதலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி கனடாவில் ஊரடங்கு நிறைவடையாத நிலையில் காதலர் தினத்தை இணையத்தின் வழியாகக் கொண்டாடி வருகின்றனர்.

காதலர் தினம் என்றாலே பூங்கொத்து மற்றும் இதய வடிவிலான கருப்பு நிற சாக்லேட் என்று குதுகலமாய் கொண்டாடி மகிழ்வார்கள்.

இதற்கு மத்தியில் இரண்டு பெண் இசைக் கலைஞர்கள் காதலர் தினத்தையொட்டி வயலின் மற்றும் புல்லாங்குழலில் ஒரே நேரத்தில் இணையாக இசைத்து மக்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தனர்.

கனடாவில் அவசரகால ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் மக்கள் யாரும் வெளியே வருவதில்லை.

மேலும் பூங்கா போன்ற பொது இடங்களில் விளையாடி பல மாதங்கள் ஆகிவிட்டன.

ஊரடங்கு வருவதற்கு முன்பு இந்த இரண்டு பெண் இசைக்கலைஞர்களும் வயலின் மற்றும் புல்லாங்குழலில் இசைத்து பூங்கா போன்ற பொது இடங்களில் மக்களை மகிழ்வித்தனர்.

தற்பொழுது ஊரடங்கு மற்றும் பல் வேறு கட்டுப்பாட்டு விதிகள் காரணத்தினால் மக்கள் பூங்கா போன்ற இடங்களில் கூடுவதில்லை.

ஆதலால் இந்த இரண்டு பெண் இசைக்கலைஞர்களும் இணையத்தின் வழியாக நேயர்களை கண்டுகளிக்க செய்தனர்.

இந்த இரண்டு பெண் இசைக்கலைஞர்களும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக இசைத்து மக்களை களிப்புற செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படியுங்க:

கனடாவின் டொராண்டோ பகுதியில் திடீர் நிறவெறி! புள்ளி விவரங்கள் உணர்த்தும் பகீர் உண்மை!