மிசிசாகா சாலையில் தீ பிடித்து இருவர் மரணம் – நகரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய விபத்து!

Two people dead after vehicle crashes into pole in Mississauga
Two people dead after vehicle crashes into pole in Mississauga

கனடாவில் மிசிசாகா பகுதியில் ஏற்பட்ட விபத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பகுதியின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை காலை நேரம் விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சரியாக 7:15 மணி அளவில் விபத்து ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வாகனமானது சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தீப்பற்றி எரிந்து உள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவரின் உடல் சாலை ஓரத்திலும் மற்றொருவரின் உடல் வாகனத்தின் உள் புறமும் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இரண்டு இளம் பருவ வயது உடையவர்களும் இறந்துவிட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

தற்பொழுது காவல் துறையினர் விபத்து குறித்த விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளனர்.

மேலும் சாலை ஓரமாக இறந்த நிலையில் கிடந்தவர் நடைபாதையில் பாதசாரி ஆக சென்றவரா? அல்லது இருவரும் ஒரே வாகனத்தில் பயணம் செய்தவர்களா ? என்று பல கோணங்களில் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்து ஏற்பட்ட பகுதியை தற்காலிகமாக மூடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் புலன் விசாரணை செய்து முடித்த பின்னர் சாலை மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

பர்ணம் டாப் சாலை பிரமாண்டரீக்கிரஷன்ட் ஆகிய பகுதிகளுக்கு இடையே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவல்துறையினர் விபத்து ஏற்பட்ட பகுதியினை விசாரணை செய்து முடிக்கும் சில மணி நேரங்கள் வரை அந்த சாலை பகுதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வேறு எந்த வாகனமும் மோதாமல் எவ்வாறு வாகனம் தீப்பிடித்து இருவர் மரணித்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.