அந்த இரண்டும் இப்போது இல்லை – டொராண்டோ வனவிலங்கு மையம் வெளியிட்ட சோக செய்தி!

இரண்டு நரி குட்டிகள், உட் பைன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மரப்பலகை நடைபாதைக்கு அருகில் அமைந்துள்ள தமது புகலிடத்தில் வசித்து வந்தது.

அந்த இரண்டு நரி குட்டிகளும் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. டொராண்டோ வனவிலங்கு மையம் இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உறுதிசெய்துள்ளது.

” மிகுந்த கனத்த இதயத்துடன் இந்த செய்தியை அறிவிக்கிறோம், கடற்கரை அருகே வாழ்ந்து வந்த இரண்டு நரி குட்டிகள் பரிதாபமான நிலையில் தனது குகைக்கு அருகாமையில் இறந்து கிடந்தன ” என்று டொரன்டோ வனவிலங்கு அமைப்பு தெரிவித்துள்ளது.

நரிகளின் குடும்பத்தினை விரைவில் கண்டுபிடித்து ஒன்றோடு ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். இரண்டு நரி குட்டிகளும் உண்ண உணவு இன்றி பரிதாபமான நிலையில் உயிர் இழந்து விட்டது கடந்த வருடம் நரிக்குட்டி ஒன்றானது பயங்கரமான நாய் கடித்து உயிரிழந்தது.

தொடர்ந்து இதே போல்நரி குட்டிகள்பரிதாபமான மரணிப்பது நிகழ்ந்து கொண்டே இருப்பதால் அவைகளின் இனம் ஒன்றோடு ஒன்றாக இணைந்து வசிப்பது பாதுகாப்பானதாக இருக்கும் என்று மையம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது இந்த இரண்டு நரி குட்டிகளின் உயிரிழப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதனை அறிய இயலவில்லை என்று டொரன்டோ வனவிலங்கு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் மையம் அறிவித்துள்ளது.

இது குறித்த தகவல்கள் விசாரணையில் கிடைக்கப்பெற்றால் செய்தியினை உடனடியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வெளியிடுவோம் என்று வனவிலங்கு மையம் அறிவித்துள்ளது.