போராட்டக்காரர்களுக்கு பாராட்டு தெரிவித்த எலான் மஸ்க் – கனடிய பிரதமரை தாக்குவதாக கூறிய எதிர்ப்பாளர்கள்

tesla elon musk6.30 PM

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் அரசாங்கம் கனடா- அமெரிக்கா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்களுக்கு covid-19 தடுப்பூசி பரிசோதனை ஆணையை அறிவித்துள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பரிசோதனை கட்டுப்பாடுகள் லாரி ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.

வியாழக்கிழமை அன்று கனடா முழுவதும் லாரி ஓட்டுனர்கள் தலைநகர் ஒட்டாவாவை நோக்கி படையெடுத்தனர். கனடிய கூட்டாட்சி அரசாங்கத்தின் கட்டாய தடுப்பூசி விதிமுறைகளை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் மத்திய ஒட்டாவாவை மூட தீர்மானித்துள்ளனர்.

உலகின் புகழ்பெற்ற பிரபலமான டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் லாரி ஓட்டுநர்களை ஊக்குவிப்பதால் லிபரல் அரசாங்கத்தின் ஆணையை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் ஒன்றிணைந்து உள்ளனர்.உலகின் பணக்காரரான எலான் மஸ்க் “Canadian trucker’s rule” என்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள் கூறுகையில் அமெரிக்க எல்லையில் பயணிக்கும் 90% சதவீத லாரி ஓட்டுநர்களுக்கு covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் லிபரல் கட்சியினர் அதனை மறுத்து விட்டனர்.மேலும் தனிப்பட்ட நபரின் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான லாரி ஓட்டுனர்கள் பல்வேறு திசைகளிலிருந்து தலைநகர் ஒட்டாவாவில் குவிவதால் நகரப் போக்குவரத்தை முடக்குவதற்கு வழிவகுக்கிறது. அரசாங்கத்தின் உத்தரவு உணவு பொருட்களை பாதிக்கும் மற்றும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

லாரி ஓட்டுநர்களின் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என்று தெரிவித்திருந்த நிலையில் சில எதிர்ப்பாளர்கள் பிரதமரை தாக்குவது மற்றும் மருத்துவமனைகளை முற்றுகையிடுவது போன்ற வன்முறைகளைப் பற்றி பேசினர்.