மாகாணத்தில் covid-19 தடுப்பூசி பாஸ்போர்ட் உருவாக்க வலியுறுத்தும் டோரி

john-tory
Toronto residents who are desperately hoping

டொரன்டோ மாகாண முதல்வர் ஜான் டோரி புதன்கிழமை அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டார். வெளிநாட்டு பயணம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆதரவு பெரும்பான்மையான நிலையில் தேவைப்படுவதால் மாகாணத்தில் ஒரு அடிப்படையான covid-19 தடுப்பூசிக்கான பாஸ்போர்ட் உருவாக்கப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

 

 

 

டொரன்டோ மாகாணம் covid-19 தடுப்பூசி மருந்துக்கான சிறிய ஆதாரத்தை உருவாக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு “நிர்வகிக்கப்படும் தடுப்பூசிகள் தொடர்பான அனைத்து தரவுகளையும் சரியான முறையில் கையாளுவதால் ஒன்டாரியோ மாகாணம் இதற்கு மிகவும் பொருத்தமானதாகும்” என்று முதல்வர் ஜான் டோரி பதிலளித்தார்.

 

 

“இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் நீங்கள் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளீர்களா அல்லது செலுத்தவில்லையா என்பதை மாகாண அரசாங்கம் வழங்கும் சான்றின் மூலம் தடுப்பூசி செலுத்தி கொண்டதை காட்டமுடியும் “என்று முதல்வர் ஜான் டோரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

 

 

” தடுப்பூசி யார் செலுத்தி கொண்டார்கள் , எப்போது செலுத்தி கொண்டார்கள், எங்கே, எத்தனை முறை போன்ற அனைத்து தரவுகளும் மாகாணத்தில் உள்ளது “.

 

 

ஒன்டாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் மூர் ” இந்த நேரத்தில் தடுப்பூசி பாஸ்போர்ட் அவசியம் இல்லை “என்று கூறினார். அதனை முதல்வர் டக் போடு அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன . ஜான் டோரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள வழிமுறைகள் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.