கனடாவில் பெற்ற தாயே இளம் குழந்தைகளை கத்தியால் குத்திய சம்பவம் – ரொறன்ரோவில் பகீர் சம்பவம்!

toronto-poce-12
Toronto women murder attempt

ரொறன்ரோவில் பெற்ற தாயே தனது  இளம் குழந்தைகள் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் காயங்களுடன் காணப்பட்டதை அடுத்து, அவர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை 10 மணிக்கு வெஸ்டன் சாலை மற்றும் பிஞ்ச் அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

அங்கு 6 மாத சிறுமி மற்றும் 4 வயது சிறுவன் காயங்களுடன் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

உடனடியாக மீட்கப்பட்ட குழந்தைகள், பலத்த காயங்களுடன், சிக்கிட்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளாக நேரிட்டாலும், தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், உயிர் பிழைப்பார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 36 வயது மதிக்கத்தக்க தாய் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms