டொராண்டோ பெண்ணுக்கு பலவந்தமாக நேர்ந்த கொடுமை? நீதிபதியே கசிந்துருகி வெளியிட்ட கருத்து!

டொராண்டோவில் மதுபான விடுதி நடத்தி வந்த இரண்டு பேர் ஒரு பெண்ணை பலவந்தமாக வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தலா 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டொராண்டோவை சேர்ந்த Gavin MacMillan மற்றும் Enzo DeJesus Carrasco ஆகிய இருவரும் மதுபான விடுதி நடத்தி வந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இருவருக்கும் தலா 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரின் குணநலன் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, அவர்கள் அந்த பெண்ணை தூக்கி எறியும் ஒரு பொருளாகவே பாவித்துள்ளனர். எந்த இடத்திலும் கண்ணியம் என்பது கடைபிடிக்கப்படவே இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தண்டனை பெறப்பட்ட குற்றவாளிகள் இரண்டு பேரும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.