Haleema : கனடாவில் டொராண்டோவை சேர்ந்த இளம்பெண் கைது! வெளியான அதிர்ச்சிப் பின்னணி!

Haleema
Haleema Mustafa has been arrested on two terrorism-related charges.

கனடாவில் டொராண்டோ பகுதியைச் சேர்ந்த பெண் ஹலீமா ( Haleema )  முஸ்தபா, பயங்கரவாதக் குழுவில் சேர,

கனடாவை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் பொது வழக்கு விசாரணை சேவை புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

முஸ்தபா மீது பயங்கரவாதம் தொடர்பான இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொது வழக்கு விசாரணை சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

குளோபல் நியூஸ் ஊடகத்திடம் முதலில் முஸ்தபாவை, ஒன்ட் மார்க்கம் நகரில் போலீசார் கைது செய்ததாக தெரிவித்தனர்.

குற்றவியல் கோட் பிரிவு 83.181 மற்றும் பிரிவு 83.18 இன் படி ஒரு பயங்கரவாத குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்க கனடாவை விட்டு வெளியேறியதாக முஸ்தபா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சட்டம்  பயங்கரவாத குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பதை தடை செய்கிறது.

2019 டிசம்பரில், முஸ்தபாவின் கணவர் இக்கர் மாவோ மீது இரண்டு பயங்கரவாத குற்றங்கள் சுமத்தப்பட்டு ஜாமீன் மறுக்கப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஜோடி 2019 ஜூன் மாதம் டொராண்டோவில் இருந்து துருக்கிக்கு புறப்பட்டது.

துருக்கிய பதிவுகளின்படி, அவர்கள் அண்டை நாடான சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில்  சேர முயற்சிக்கிறார்கள் என்ற அச்சம் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இருவரையும் துருக்கிய அதிகாரிகள் சான்லியூர்ஃபா என்ற எல்லை நகரத்தில் தடுத்து வைத்தனர்.

முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தில்  2013 ஆம் ஆண்டு குற்றவியல் கோட் திருத்தப்பட்டது. இது பயங்கரவாத செயல்களில் பங்கேற்க பயணம் செய்வது அல்லது வெளிநாடு செல்ல முயற்சிப்பது குற்றம் என்று கூறுகிறது.

Alana Joyner : கனடாவில் நள்ளிரவில் 18 வயது இளம்பெண்ணை கண்டுபிடித்த டொராண்டோ காவல்துறை – அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms