டொராண்டோவில் டி டி சி பஸ் இரண்டு வாகனங்கள் மீது மோதி விபத்து – தொடரும் சோகம்!

toronto-poce-12
Toronto women murder attempt

கனடாவின் டொரன்டோ நகரில் பல வாகனங்கள் ஒரே இடத்தில் மோதியதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அன்று இரவு நேரத்தில் டி டி சி பஸ் மேலும் இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சரியாக பதினொன்று முப்பது மணிக்கு முன்பு காவல்துறையினருக்கு தகவல்கள் கூறப்பட்டது.இந்த விபத்து ஸ்கார்லெட் சாலையில் இரவு நேரத்தில் நடந்துள்ளது.

காவல்துறையினரின் தகவலின்படி இரண்டு கார்களும் ஒரு டிடிசி பேருந்தும் ஒன்றோடு ஒன்று மோதி இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

படுகாயமடைந்த இருவரும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். டொரன்டோ மருத்துவ நிபுணர்கள் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மற்ற இருவரும் படுகாயத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறிய படவில்லை. விபத்து ஏற்பட்ட பகுதி மூடப்பட்டிருந்தது இருப்பினும் சனிக்கிழமை காலைப் பொழுதில் அந்தப் பகுதி உபயோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சாலையில் திடீரென ஏற்பட்ட விபத்தால் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவர் விரைவில் வீடு திரும்பி விடுவார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்